6. கொலைக்களக் காதை


கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின்
இருநில மருங்கின் யார்காண் கிற்பார்


186
உரை
187

          கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் - அவர் கன்னகம் முதலிய கருவிகளைக் கொண்டு பெறுதற்கரிய பொருள்களைக் கைப்பற்றினால், இருநிலம் மருங்கின் யார் காண்கிற்பார் - இப் பெரிய வுலகத்து அவரைக் காண வல்லார் யார்? ஆகலான் ;

         ஆகலான் என ஒரு சொல் வருவிக்க.