|
|
இரவே பகலே என்றிரண் டில்லை
கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை
|
|
இரவே பகலே என்று இரண்டு இல்லை - அவர்க்கு இரவும் பகலும் என்னும் இரண்டு பகுதி இல்லை,
கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை - அவர் களவு செய்யும் இடத்தைக் கேட்பின்
நாம் ஓடி ஒளிக்கலாம் இடம் வேறு இல்லை
; எல்லாக் காலமும், எல்லா
இடமும் அவர் களவு செய்தற்குப் பொருந்தியனவே என்றவாறாயிற்று.
இங்ஙனம் களவு நூற்றுறை
கூறியோன், கள்வருடைய வன்மையை அவர்க்குணர்த்துவான் பொய்க் கரி ஒன்று கூறுகின்றான்
; |
|