6. கொலைக்களக் காதை

15

மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி

ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள்
நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச்



15
உரை
17

          மாதவத்தாட்டி வழித்துயர் நீக்கி - கவுந்தியடிகள் வழிச் சேறற்கண் உளவாம் துன்பங்களை விலக்கிக் காத்து, ஏதம் இல்லா இடந்தலைப்படுத்தினள் - குற்றம் சிறிதுமில்லாவிடத்துக் கூட்டினாள், நோதகவு உண்டோ நும் மகனார்க்கு இனி- ஆகலான் நும் கணவனுக்கு இனி இவ்விடத்து உளக் கவலை யுறுதல் உண்டோ என்று சொல்லி ;

தலைப்படுத்தல் - கூட்டுதல். நோவு தகவு, நோதகவு ஆயிற்று என்ப. மகன் - கணவன் ; 1"நினக்கிவன் மகனாய்த் தோன்றிய தூஉம்" என்றார் மணிமேகலையினும். உண்டோ - ஒ, எதிர்மறை. என்று சொல்லி என வருவித்துரைக்க.

1 மணி, 21: 29.