6. கொலைக்களக் காதை

190





195





200

தூதர்கோ லத்து வாயிலின் இருந்து
மாதர்கோ லத்து வல்லிருட் புக்கு
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு
இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம
வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத்

துயில்கண் விழித்தோன் தாளிற் காணான்
உடைவாள் உருவ உறைகை வாங்கி
எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான்
மல்லிற் காண மணித்தூண் காட்டிக்
கல்வியிற் பெயர்ந்த கள்வன் றன்னைக்

கண்டோ ருளரெனிற் காட்டும் ஈங்கிவர்க்
குண்டோ வுலகத் தொப்போ ரென்றக்


190
உரை
202

          தூதர் கோலத்து வாயிலின் இருந்து - முன்னொரு நாளில் ஒரு கள்வன் தூதருடைய உருவத்துடன் பகற் காலத்து அரசன் வாயிலின்கணிருந்து, மாதர் கோலத்து வல் இருள் புக்கு - மிக்க இருளையுடைய இராக்காலத்துப் பெண்ணுருக்கொண்டு உள்ளே நுழைந்து, விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று விளக்கின் நிழலிலே பள்ளியறையினுள் நடுக்கமின்றிப் புக்கு, ஆங்கு இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்க - அவ்விடத்து இந் நெடுஞ்செழியனுக்கு இளங்கோவாகிய வேந்தன் துயில்கின்றவனுடைய வெயிலிடுகின்ற வயிரத்தையுடைய அசையும் ஒளி பொருந்திய ஆரத்தை விரைவில் வாங்கினானாக, துயில் கண்விழித்தோன் தோளிற் காணான் உடைவாள் உருவ - தூக்கத்தினின்றும் எழுந்த அவ் விளவரசன் ஆரத்தைத் தோளிற் காணானாய்த் தன் உடைவாளை உருவ, உறை கை வாங்கி எறிதொறும் செறித்த இயல்பிற்கு ஆற்றான் - அதன் உறையைத் தன் கையிற் பற்றித் தான் குத்துந்தோறும் வாளிலே உறையைச் செறித்த அத் தன்மைக்கு ஆற்றானாய், மல்லிற் காண - மற்போரான் அவன் வலியைக் காண விரும்பிய அளவிலே, மணித்தூண் காட்டிக் கல்வியிற் பெயர்ந்த கள்வன் தன்னை - அவ்விடத்து நின்றதோர் மணித் தூணைத் தானாகக் காட்டித் தன் களவு நூற்பயிற்சியினால் மறைந்த கள்வனை, கண்டோர் உளர் எனில் காட்டும் - பார்த்தோருளராயின் அவர்களைக் காட்டுமின், ஈங்கு இவர்க்கு உண்டோ உலகத்து ஒப்போர் என்று அக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல - காட்டுவாரிலர் ஆகலான் இக் கள்வர்க்கு ஒப்பாவார் இவ் வுலகத்து ஒருவருண்டோ என அக் கொலைத் தொழிலினையுடைய பொற்கொல்லன் கூற ;

          வல் இருள் - மிக்க இருள். வல்லிருட்புக்கு என்றதனால், வாயிலினிருந்தமை பகற் காலமாயிற்று. துளக்கம் - நடுக்கம், அச்சம். மின்னின் வாங்க - மின்னலின் வழியே வாங்க எனலுமாம். மின் - ஒளி.

          வேந்தன் விழித்தோன் காணான் உருவ வாங்கிச் செறித்த இயல்பிற்கு ஆற்றான் காணக் காட்டிப் பெயர்ந்த கள்வன் என்க.