|
25
|
இடைக்குல மடந்தையர் இயல்பிற்
குன்றா
மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற்
கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி யரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப
|
|
இடைக்குல மடந்தையர் - ஆயர் குலத்து மகளிர். இயல்பிற் குன்றா மடைக்கலந் தன்னொடு
- மாதரி கூறிய தன்மை யிற் குறையாத சமைத்தற் குரிய கலங்களுடனே, மாண்புடை மரபிற்கோளிப்
பாகற் கொழுங் கனித் திரள்காய் - மாட்சிமை யுடையோர் கொடுக்கும் தன்மை போலப்
பூவாது காய்க்கும் பலாவினுடைய கொழுவிய திரண்ட முதிர்ந்த காயும், வாள்வரிக்கொடுங்காய்
- வளைந்த வரிகளையுடைய வெள்ளரிக்காயும், மாதுளம் பசுங்காய் - கொம்மட்டி மாதுளையின்
இளங்காயும், மாவின் கனியொடு வாழைத் தீங்கனி - மாம்பழமும் இனிய வாழைப்பழமும், சாலி
அரிசி - செந்நெல் அரிசியும் ஆகிய இவற்றை, தம்பாற் பயனொடு - தம்குலத்திற்குரிய
பாலுடனும் நெய்யுடனும், கோல் வளை மாதே கொள்கெனக் கொடுப்ப - திரண்ட வளையலை யணிந்த
மாதே கொள்வாயாக வென்று சொல்லிக் கொடுக்க ;
பெரியோர் சொல்லாமலே
செய்தல் போலத் தான் பூவாதே காய்த்தலின், மாண்புடை மரபிற் கோளிப்பாகல் எனப்பட்டது.
1 "சொல்லாம லேபெரியர் சொல்லிச்
சிறியர்செய்வர், சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல, குலாமாவை வேற்கண்ணாய் கூறுவமை
நாடிற், பலாமாவைப் பாதிரியைப் பார்" என்பது அறியற்பாலது. கோளி - பூவாது காய்க்கும்
மரம். பாகல்--பலா. கோளிப்பாகல் : வெளிப்படை. கனிக்காய் - கனிக்கு ஆன காய்,
முதிர்ந்த காய் : இதனை இக்காலத்துச் செங்காய் என்ப. வால் வரிக் கொடுங்காய் எனப்
பாடங் கொண்டு, வெள்வரிக்காய் என்பர் அரும்பத உரை யாசிரியர். கொம்மட்டி மாதுளங்காய்
புளித்த கறி ஆக்குதற்குச் சிறந்தது என்பர். பாற்பயன் - பாலாகிய பயன் எனலுமமையும். |
1
தனிச்செய்யுள்.
|
|