|
|
எடுத்துக்
காட்டுl
ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார
எழுவரிளங் கோதை யார
என்றுதன் மகளைநோக்கித்
தொன்றுபடு முறையால் நிறுத்தி
இடைமுது மகளிவர்க்குப்
படைத்துக்கோட் பெயரிடுவாள்
குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே ;
|
-`
|
தொழுவிடத்
துண்டாகிய ஏழுவகை ஏற்றினை இக் கோதையையுடைய ஏழு கன்னியர் தன் மணங்குறித்து வளர்த்தனர்.
குறித்து வளர்த்தல் - இதனை அடக்கியோனையே மணப்பேம் என்று கருதி வளர்த்தல்.
"என்றுதன் மகளை ......... பெயரிடுவாள்" என்று தன் மகளை நோக்கி - என்று இங்ஙனம்
கூறித் தன் மகளாகிய ஐயையை நோக்கி, தொன்று படு முறையான் நிறுத்தி இடைமுதுமகள் இவர்க்குப்
படைத்துக் கோள் பெயர் இடுவாள் - இம் மகளி ரைப் பழைய நரம்புகள் நிற்கும் முறைமைகளிலே
நிறுத்தி இடையர் குலத்துப் பிறந்த முதியவளாகிய மாதரி இவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாளாயினாள்;
இடைமுதுமகள் - மாதரி. படைத்துக்கோட் பெயர் இடுதல் - ஒரு பொருளுக்கு ஒருபெயர் இருப்பவும்
ஒரு காரணத்தால் வேரொரு பெயரை இட்டு வழங்குதல்
"குடமுதல் .... பெயரே" குடமுதல் இட முறையா - குட திசையில் குரல் நரம்பு முதல் இடமுறையாக,
குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே
- குரலும் துத்தமும் கைக்கிளையும் உழையும் இளியும் விளரியும் தாரமும் என இவர்க்கு முறையே
இட்ட பெயரே மாதரி விரும்பிய பெயர்களாம் ;
தாரமென என்பதன் பின் சில சொல் வருவித்துரைக்க. விரிதரு பூங்குழல் - மாதரி, குடமுதல்
- மேற்கு எதிர்முகமாக என்றபடி. பன்னிரண்டு இராசிகளுள்ளே இடபம், கடகம், சிங்கம்,
துலாம், தனுசு, கும்பம், மீனம் என்னும் ஏழினும் குரல் முதலாய ஏழும் முறையே நிற்பது ஒர்
முறை. துலாம், தனுசு, கும்பம், மீனம், இடபம், கடகம், சிங்கம் என்னும் ஏழினும் குரல்
முதலாய ஏழும் முறையே நிற்பது மற்றோர் முறை. இவற்றை,
"ஏத்து மிடப மலவனுடன் சீயம
கோற்றனுக் கும்பமொடு மீனமிவை--பார்த்துக்
குரல்முதற் றார மிறுவாய்க் கிடந்த
நிரலேழுஞ் செம்பாலை நேர்."
"துலைநிலைக் குரலுந் தனுநிலைத் துத்தமும்
நிலைபெறு கும்பத்து நேர்கைக் கிளையும்
மீனத் துழையும் விடைநிலத் திளியும்
மானக் கடகத்து மன்னிய விளரியும்
அரியிடைத் தாரமும் அணைவுறக் கொளலே"
என்பவற்றானறிக. குரவையில் இவ்விரு முறையானும் எழு வரும் நின்று கைகோத்துப் பாடுகின்றன
ராகலின் ஒருகால் இடத்தில் நின்றவர் மற்றொருகால் வலத்திலும், வலத்தில் நின்றவர்
இடத்திலுமாக மாறி நிற்றல் இயல்பு. பின்வரும் சக்கரங்களில் இது தோன்றும். ஏழ் நரம்புகளில்
முதலிற் றோன்றியது தாரம், ; தாரத்தில் உழையும், உழையிற் குரலும், குரலுள் இளியும்,
இளியுள் துத்தமும், துத்தத்துள் விளரியும், விளரியுட் கைக்கிளையும் பிறக்கும். இவற்றாற்
பெரும் பண்கள் பிறக்குமாறு.
"தாரத் துழைதோன்றப் பாலையாழ் தண்குரல்
ஒருமுழைத் தோன்றக் குறிஞ்சியாழ்--நேரே
இளிகுரலிற் றோன்ற மருதயாழ் துத்தம்
இளியிற் பிறக்கநெய்த லியாழ்"
என்பதனாற் புலனாம். தாரம் குரலாய ஏழ் நரம்பும் அதன் கிளையாகிய உழை குரலாய ஏழ் நரம்பும்
அலகு ஒத்திசைப்பதனால் பாலை யாழும், உழை குரலாய ஏழ் நரம்பும் அதன் கிளையாகிய குரல்
குரலாய ஏழ் நரம்பும் அலகு ஒத்திசைப்பதனால் குறிஞ்சி யாழும், குரல் குரலாய ஏழ் நரம்பும்
அதன் கிளையாகிய இளி குரலாய ஏழ் நரம்பும் அலகு ஒத்திசைப்பதனால் மருத யாழும், இளி
குரலாய ஏழ் நரம்பும் அதன் கிளையாகிய துத்தம் குரலாய ஏழ் நரம்பும் அலகு ஒத்திசைப்பதனால்
செவ்வழி யாழும் பிறக்கு மென்க. ஏழு பாலையிசை பிறத்தல் முதலியனபற்றிய குறிப்புக்கள்
ஈண்டு மூலத்தில் இல்லையேனும், அடியார்க்குநல்லார் அவற்றைத் தந்துரைத்துள்ளார்.
[அடி. இந் நரம்பிற் பாலை பிறக்குமிடத்துக் குரலும் துத்தமும் இளியும் நான்கு மாத்திரை
பெறும்; கைக்கிளையும் விளரியும் மூன்று மாத்திரை பெறும்; உழையும் தாரமும் இரண்டு மாத்திரை
பெறும். இவற்றுட் குரல் குரலாய் ஒத்து நின்றது செம்பாலை; இதனிலே குரலிற் பாகத்தையும்
இளியிற் பாகத்தையும் வாங்கிக் கைக்கிளை உழை விளரி தாரத்திற்கு ஒரோவொன்றைக்
கொண்டு சேர்க்கத் துத்தம் குரலாய்ப் படுமலைப் பாலையாம்; இவ்வாறே திரிக்க இவ் வேழு
பெரும் பாலைகளும். பிறக்கும்; பிறக்குங்கால் திரிந்த குரலேழும் முதலாகப் பிறக்கும்.
அவை பிறக்குமாறு :--குரல் குரலாயது செம்பாலை; துத்தம் குரலாயது படுமலைப்பாலை; கைக்கிளை
குரலாயது செவ்வழிப்பாலை; உழை குரலாயது அரும்பாலை; இளி குரலாயது கோடிப்பாலை; விளரி
குரலாயது விளரிப்பாலை ; தாரம் குரலாயது மேற் செம்பாலை என வரன்முறையே ஏழு பாலையும்
கண்டுகொள்க.]
அரங்கேற்று காதையிலும், வேனிற்காதையுரையிலும் கூறப் பட்டவை இதனின் வேறுபட்ட முறையினவாதல்
காண்க.
இனிப் படைத்துக்கோட் பெயரிடுவாள் :-- |
|