7. ஆய்ச்சியர் குரவை

2
பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ ;


2
உரை
2

            "பாம்புகயிறா . . . . . . . . . தோழீ" பாம்பு கயிறு ஆ கடல் கடைந்த மாயவன் - மேருவாகிய மத்தத்தில் வாசுகி என்னும் பாம்பு கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்த மாயவன், ஈங்கு நம் ஆனுள் வருமேல் - நம் வழிபாட்டால் இவ்விடத்து நம் ஆனிரையுள் வருவானாகில், அவன் வாயில் ஆம்பல் அம் தீங்குழல் கேளாமோ தோழீ - அவன் வாயினால் ஊதும் இனிய ஆம்பற் குழலோசையைக் கேட்போம் தோழீ ;