மூலம்
7. ஆய்ச்சியர் குரவை
தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை
அணிநிறம் பாடுகேம் யாம் ;
உரை
"தொழுனைத்துறைவ . . . . . யாம்" தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை அணி நிறம் பாடுகேம் யாம் - தொழுனைத் துறைவனுடையவும் அவனோடு ஆடிய பின்னையினுடையவும் நிற அழகினை யாம் பாடுவேம் ;
தொழுனை - யமுனை. தொழுனைத்துறைவன்-மாயவன் துறைவனுடையவும் துறைவனோடாடிய பின்னையினுடையவும் என்க. தொழுனைக் கணவனோடு எனவும் பாடம். இச் செய்யுள் இடையிற் சேர்க்கப்பெற்றதென்பர் அரும்பதவுரையாசிரியர்.
1
கலி. 106.