|
2
|
பொன்னிமயக் கோட்டுப்
புலிபொறித்து மண்ணாண்டான்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால் ;
|
|
"பொன்னிமய.........என்பரால்" பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து
மண் ஆண்டான் - பொன்னாகிய இமயமலையின் சிமையத்திலே தனது புலியை எழுதி இப்பாலுள்ள
நிலமெல்லாம் ஆண்டவன், மன்னன் வளவன் மதிற் புகார் வாழ் வேந்தன் - மதிலையுடைய புகார்
நகரத்து வாழும் வேந்தனாகிய சோழ மன்னனாவான், மன்னன் வளவன் மதிற்புகார் வாழ் வேந்தன்
- அவன் யாவனென்னின், பொன்னந் திகிரிப் பொரு படையான் என்பரால் - போர் செய்யும்
அழகிய சக்கரப்படையையுடைய திருமால் என்று கூறுவர் ;
பொன்னந்திகிரி - பொற்றிகிரியுமாம். |
|