|
3
|
முந்நீரி னுள்புக்கு
மூவாக் கடம்பெறிந்தான்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னவில்தோ ளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால் ;
|
|
"முந்நீரினுள் . . . . என்பரால்" முந்நீரின் உள் புக்கு மூவாக்கடம்பு
எறிந்தான் மன்னர் கோச் சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் - கடலினுள்ளேபுக்கு மூத்தலின்றி
ஒருபெற்றியே நிற்கும் கடம்பை வெட்டினவன் வள மிக்க வஞ்சி நகரத்து வாழும் மன்னர் பிரானாகிய
சேர வேந்தனாவான், மன்னர் கோச் சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் - அவன் யாவனென்னின்,
கல் நவில் தோள் ஓச்சிக் கடல் கடந்தான் என்பரால் - மலையை ஒத்த தன் தோள்களைச்
செலுத்திப் பாற்கடலைக் கடைந்த திருமால் என்று கூறுவர் ;
கடம்பெறிந்த செய்தியை, 1 "மாநீர்
வேலிக் கடம்பெறிந் திமயத்து, வானவர்மருள மலைவிற் பூட்டிய, வானவர் தோன்றல்" எனவும்,
2 வலம்படு முரசிற் சேர லாதன்,
முந்நீ ரோட்டிக் கடம் பறுத்து" எனவும் வருவனவற்றா னறிக. முந்நீர் - கடல்; ஆகு பெயர்;
படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தன்மையினை யுடையது என்பது பொருள்.
இது குறித்து அடியார்க்குநல்லார் எழுதிய வுரை வருமாறு:--
"முந்நீர் - கடல் ; ஆகுபெயர்; ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரென இவை என்பார்க்கு அற்றன்று;
ஆற்றுநீர் மேனீராகலானும் இவ்விரண்டுமில்வழி ஊற்று நீரும் இன்றாமாதலானும் இவற்றை முந்
நீரென்றல் பொருந்தியதன்று; முதிய நீரெனின், நெடுங்கடலுந்தன்னீர்மை குன்றும் என்பதனால்
அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது ; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின்,
முச் செய்கையையுடைய நீர் முந்நீரென்பது; முச் செய்கையாவன மண்ணைப் படைத்தலும் மண்ணை
அழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்"
மூவாக்கடம்பு - வஞ்சத்தால் நிற்கின்றதாகலான் மூப்பின்றி என்றும் ஒருபெற்றியே நிற்கும்
கடம்பு. இவை மூன்றும் பூவைநிலை. இந் நிகழ்ச்சி மதுரைக்கண்ண தாகலின் விருப்பு வெறுப்பற்ற
சேர முனியாகிய இளங்கோவடிகள் சேரனை முற்கூறாது ஈண்டுப் பாண்டியனை முற்கூறினாரென்க. |
1 சிலப்,
25: 1--2. 2 பதிற்று. 11,
|
|