|
|
பாடகச் சீறடி பரற்பகை யுழவா
காடிடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதிவள் செவ்வி அறிகுநர் யாரோ
|
|
பாடகச்
சீறடி பரற்பகை உழவா -மதுரை செல்வது நும் கருத்தாயின் இவளது பாடக மணிந்த சிறிய வடிகள்
பருக்கையாகிய பகையை வெல்ல மாட்டா, காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு அரிது இவள்
செவ்வி அறிகுநர் யாரோ - ஆதலால் நீர் காடும் நாடுமாகிய இவ்வழியைக் கடத்தற்கு இவள்
தன்மை ஏற்றதன்று இனி ஊழ் என் செய்யுமோ அதனை அறிவார் யார் ;
காடு இடையிட்ட நாடு - காடும் நாடும்.
அறிகுநர் யாரோ என்றது இரக்கம் தோற்றி நின்றது. |
|