|
3 |
திரண்டமரர் தொழுதேத்தும்
திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே ;
|
|
"திரண்டமரர்...மருட்கைத்தே"
திரண்டு அமர் தொழுது ஏத்தும் திருமால் நின் செங்கமல இரண்டு அடியான் மூவுலகும் இருள் தீர
நடந்தனையே - அமரர் கூடி வணங்கிப் போற்றுகின்ற திருமாலே நினது சிவந்த தாமரை மலர்
போலும் இரண்டு அடிகளான் மூன்று உலகங்களும் இருள் நீங்கும் வண்ணம் நடந்தாய், நடந்த
அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி - அங்ஙனம் நடந்த அடிகள் பாண்டவர் பொருட்டுப்
பின்பு தூதாக நடந்த அடிகளாம், மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே - நரசிங்கமாகிப்
பகையை அழித்தோய் இஃது ஓர் மாயமோ எங்கட்கு மிகவும் மருட்கையை உடைத்தாயிருந்தது;
அமரர் தொழுதேத்தலை அடிக்குக் கூட்டினுமமையும். இவை மூன்றும் முன்னிலைப் பரவல். |
|