7. ஆய்ச்சியர் குரவை

3
மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம
முல்லையம் பூங்குழல் தான் ;


3
உரை
3

           "மல்லல்.........பூங்குழறான்" மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம் முல்லையம் பூங்குழல் தான் - வலி மிக்க இவ் விளைய ஏற்றினை எறிச் செலுத்தினானுக்கே இம் முல்லை மலரினைச் சூடிய அழகிய கூந்தலுடையாள் உரியளாவாள் ;

மல்லல் - வளம் எனினும் அமையும். தான், அசை.