மூலம்
7. ஆய்ச்சியர் குரவை
6
வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக
கொன்றையம் பூங்குழ லாள் ;
6
உரை
6
"வென்றி.........பூங்குழலாள்" வென்றி மழவிடை ஊர்ந் தாற்கு உரியள் இக் கொன்றையம் பூங்குழலாள் - வென்றி யினையுடைய இவ்விளைய ஏற்றினை அடக்கிச் செலுத்தினானுக்கு இக் கொன்றைப் பழம் போலும் பொலிவு பெற்ற கூந்தலினை யுடையாள் உரியளாவாள் ;
1
"கொன்றைப் பழக்குழற் கோதையர்" என்றார் பிறரும்.
1
வளையாபதி.