7. ஆய்ச்சியர் குரவை

7

தூ நிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப
பூவைப் புதுமல ராள் ;


7
உரை
7

         "தூ நிற வெள்ளை ......... மலராள்" தூ நிற வெள்ளை அடர்த் தாற்கு உரியள் இப் பூவைப் புதுமலராள் - தூய வெள்ளை நிற முடைய இவ் வேற்றின் சீற்றத்தினைக் கெடுத்தவனுக்கு இக் காயாம் பூப் போலும் நிறத்தினையுடையாள் மனைவி ஆவாள் ;

     1 "காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே" 2 "நுண்பொறி வெள்ளைக் கதனஞ்சான் பாய்ந்த பொதுவன்" 3 "செம்மறு வெள்ளையும்" 4 "பானிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளையும்" என்றற்றொடக்கத்தனவாக முல்லைக் கலியில் வரும் எருத்து வேறுபாடு களும் ஏறுகோள் இயல்பும் ஈண்டு அறியற்பாலன.

1 கலி. 104. 2. கலி. 101. 3 கலி. 105. 4. கலி. 104.