அது கேட்டு - அதனைக் கேட்டு, சோழன் பெருங்கிள்ளி - பெருங்கிள்ளி யென்னுஞ் சோழன்,
கோழியகத்து - உறை யூரிடத்தே, எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்தினிக்
கடவுள் ஆகும் என - இவள் ஓர் பத்தினிக் கடவுளாதலின் எத்திறத்தானும் நமக்கு வரந்தருமெனக்
கருதி, நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து - நங்கைக்குக் கோயிலும் எடுப்பித்து,
நித்தல் விழா அணி நிகழ்வித்தோன் - நித்தமாகிய அணி விழாவும் நிகழ்வித்தனன்.
பெருங்கிள்ளி - இவள் பெருநற்கிள்ளி யெனவும் படுவன். கோழி - உறையூர்;' இதனை,
1
''முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய
புறஞ்சிறை வாரணம்''
என்பதனானறிக. 'எத்திறத்தானு மென்றார்; இவள் பிறந்த உரி மைபற்றி' என்பர் அடியார்க்குநல்லார்.
உரைபெறு கட்டுரை - உரைத்துப் போதுகின்ற கட்டுரை என்பர் அரும்பதவுரையாசிரியர்.
உரைபெறு கட்டுரை முற்றிற்று.
|