|
5
|
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
தூவித் துறைபடியப் போயினாள் மேவிக்
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள
|
|
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் - அசைந்த சாயலையுடைய ஆய்க்குலத்து முதியளாகிய மாதரி, பூவும்
புகையும் புனை சாந்தும் கண்ணியும் நீடு நீர் வையை நெடுமால் அடி ஏத்தத் தூவித் துறை படியப்
போயினாள் மேவிக் குரவை முடிவில் - தாம் ஆடிய குரவைக் கூத்தின் முடிவின்கண் மலரும் புகையும்
புனையுஞ் சந்தனமும் மாலையு மென்னும் இவற்றைத் தூவி இடையறா தொழுகும் நீரினையுடைய வையைக்
கரைக்கண் திருமால் திருவடிகளைப் போற்றுதற்கு விரும்பி நீராடப் போயினாளாக, ஓர் ஊர்
அரவங் கேட்டு விரைவொடு வந்தாள் உளள் - அப்பொழுது வேறொருத்தி உண்ணகரத்துப் பிறந்ததொரு
சொற்கேட்டு அதனைக் கூறுதற்கு விரைவில் வந்தாள் உளள்;
ஆயர்முதுமகள் போயினாள் ஆடிய சாயலாள் வந்தாளுளள்
என்றியைத்தலுமாம். சாயலாள் - ஐயை யென்றலுமாம். நீடுநீர் - இடையறாது ஒழுகும் நீர்.
நெடுமால் இருந்த வளமுடையாரெனவும் சுந்தர வானத் தெம்பெருமான் எனவும் கூறுப. துறைபடிதல்
- நீராடுதல் ; அக் கால வழக்கு என்ப. தூவி ஏத்தத் துறைபடியப் போயினாள் என்க. தூவுதல்
- வழங்குத |
|