8. துன்ப மாலை

30

பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த
திங்கள் முகிலோடுஞ் சேண்நிலங் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை
எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்


30
உரை
33
       பொங்கி எழுந்தாள் - சீறி எழுந்தாள், விழுந்தாள் பொழி கதிர்த் திங்கள் முகிலோடுஞ் சேண்நிலங்கொண்டென - நிலவினைப் பொழியும் திங்கள் கரிய முகிலோடும் பெரிய நிலத்தின்கண் வீழ்ந்தது போல வீழ்ந்தாள், செங்கண் சிவப்ப அழுதாள் - தன் சிவந்த அரி பரந்த கண்கள் சிவக்கும்படி அழுதாள், தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் - தன் கணவனை எவ்விடத்தாய் என்று கூவி வருந்தி ஏக்கமுற்று மயங்குவாள்;

சேணிலங்கொண்டென விழுந்தாள் என்க. எழுந்தாள் மாழ்குவாளாய் விழுந்தவளாய் அழுதாள் என்க. தன் தலைவனைக் கொலை குறித்தனர் எனக் கேட்டவுடன் வெகுளியும் பின்னர் அவலமும் தோன்றிய வென்க. திங்களும் முகிலும் அவள் முகத்திற்கும் குலைந்த குழலுக்கும் உவமை. ஆ, இரக்கக் குறிப்பு. எங்கணாய் என்று பாடங் கொள்ளுதலுமாம்.