|
35
|
இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத்
துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல்
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ
|
|
இன்பு உறு தம் கணவர் இடர் எரியகம் மூழ்க -தம்மோடு இன்புற்ற தன் கணவன்மார்
இடர் செய்யும் தீயிடத்து மூழ்கவும், துன்புறுவன நோற்றுத் துயர்உறு மகளிரைப்போல் - அவரோடு
தாமும் தீயின் மூழ்காது துன்பமுறுந் தன்மையவாகிய கைம்மை நோன்பினை நோற்றுத் துயரடையும்
பெண்டிரைப்போல, மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப அன்பனை இழந்தேன் யான்
அவலங்கொண்டு அழிவலோ - மக்கட் கூட்டமெல்லாம் என்னைப் பழி தூற்றப் பாண்டியன் தவற்றினைச்
செய்தலாற் காதலனை இழந்தேனாகிய யான் அழுகையைக்கொண்டு உள்ளமகிழ்கின்றா ளொருத்தியோ;
துன்புறுவன நோற்றல்
- 1வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்
தட்ட, வேளை வெந்தை வல்சி யாகப், பரற்பெய் பள்ளிப் பாயின்று வதிதல் ஆம். மன்னவன்
தவறிழைப்ப அன்பனை இழந்தேன் யான் மகளிரைப்போல் அலர்தூற்ற அவலங்கொண் டழிவலோ
என்க. |
1.
புறம். 245.
|
|