8. துன்ப மாலை




40

நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித்
துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல்

மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்பL
அறனெனும் மடவோய்யான் அவலங்கொண் டழிவலோ


38
உரை
41

          நறை மலி வியன் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி - மணம் மிக்க அகன்ற மார்பினையுடைய தங் கணவனை இழந்ததனால் ஏக்கமுற்று, துறை பல திறம் மூழ்கித் துயர்உறு மகளிரைப்போல் - திறப்பட்ட பல நீர்த்துறைகளிலும் சென்று நீராடி இடர் மிக்கு அழுகின்ற பெண்டிரைப் போல, மறனொடு திரியுங் கோல் மன்னவன் தவறு இழைப்ப அறன் எனு மடவோய் யான் அவலங்கொண்டு அழிவலோ - அறக் கடவுளெனப்படும் அறிவற்றோய் பாவத்தினைப் பின்பற்றிச் செல்லும் கொடுங்கோன்மையை யுடைய பாண்டியன் தவற்றினைச் செய்தலான் யான் அவலத்தினை மேற்கொண்டு உள்ளமழிவேனோ;

மூழ்குதல் - அழுக்கறக் குளிரக் குளித்தல். அல்லவை செய்யாத் தன்கணவனைக் காவாதிருந்ததற் பொருட்டும் மன்னவன் மறனொடு திரியக்கண்டும் அவனிடத்தே நின்றதுபற்றியும் புலந்து 'அறனெனுமடவோய்' என்றாள். முன்னர், நண்பன் என ஒருமை கூறிப் பின்னர் மகளிர் எனப் பன்மை கூறியவதனால் கணவன் என்பதனை மகளிர்க்குத் தனித்தனியே கூட்டுக. "ஏவ லிளையர் தாய் வயிறு கறிப்ப" என்பதுபோல. பின்வருவதனையும் இவ்வாறே கொள்க.