|
|
நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்
மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ
|
|
நண்பகற் போதே நடுக்கு நோய் கைம்மிகும் - நல்ல பகற் பொழுதிலேயே நடுக்கம்
செய்கின்ற துன்பம் மிகாநின்றது, அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு அன்றே - அதுவுமன்றி
என் காதலனைக் காணப் பெறாமையான் என் உள்ளம் வருந்துகின்றது, அன்பனைக் காணாது அலவும்
என் நெஞ்சு ஆயின் - இங்ஙனம் என்னுள்ளம் வருந்துமாதலான், மன்பதை சொன்னது எவன் வாழியோ
தோழீ - தோழீ அயலார் கூறிய மொழிதான் யாதோ;
கோவலன் பிரிந்த போதே
இவளுள்ளம் கலங்கலான் நண்பகற்போதே நோய் கைம்மிகும் என்றாள். அன்றியும் இக் காலம்
பகற்கால மாகலான் இங்ஙனங் கூறினாள் எனலுமாம். நடுக்குநோய்- நடுக்கஞ் செய்யும் நோய்.
அலவும் - சுழலும், வருந்தும் மன்பகை - மக்கட் கூட்டம், ஈண்டு ஏதிலார். |
|