|
20
|
தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ
|
|
தஞ்சமோ தோழீ தலைவன் வரக் காணேன் - என் நாயகன் வரக் காண்கின்றிலேன் ஆதலான்
தோழீ இனி எனக்கொரு அடைக்கலமுண்டோ, வஞ்சமோ உண்டு - என் தலைவனை வஞ்சகப்படுத்திய
செயலொன்றுளது, மயங்கும் என் நெஞ்சு அன்றே.ஆகலான் என்னுள்ளம் மயங்காநின்றது, வஞ்சமோ
உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் - இங்ஙனம் வஞ்சச் செயல் நிகழ்ச்சியும் என் நெஞ்சு
கலங்கலும் உண்டா மாகலான், எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ - தோழீ அயலார்
கூறிய மொழி யாதோ ;
தஞ்சமோ என்பதற்கு நிகழ்ந்த செயல் எளிதன்று
எனக் கூறினுமமையும், வஞ்சம் - வஞ்சச் செயல். எஞ்சலார் - அயலார் ; இனி, நெஞ்சலார்
எனப் பிரித்து நெஞ்சம் கலத்தலில்லாதவர் எனக்கொண்டு அப்பொருட்டாக்கினும் அமையும்.
தாழிசை மூன்றனுள்ளும் வந்த தோழீ என்றது ஐயையை என்க. |
|