|
25
|
அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம்
என்றே
குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே
|
|
அரசு உறை கோயில் அணியார் ஞெகிழம் - அரசன் விரும்பித் தங்கும் கோயிற்கணிருந்த
அழகு மிக்க சிலம்பினை, கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம்
என்றே - சிறிது அரவமும் இன்றிக் கவர்ந்த கள்வன் இவனேயாமென்று கூறி, குரை கழல் மாக்கள்
கொலை குறித்தனரே - ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த ஊர்காவலர் இவனைக் கொலை செய்தலைக்
கருதினர் ;
அரசு உறை கோயில் என்றது ஈண்டு அந்தப்புரத்தை
என்ப. ஞெகிழம் - சிலம்பு. கரைதல் - ஒளித்தல் ; வருந்துதல் எனலும் ஆம். கொலை செய்தனர்
எனக் கூறின் இவள் இறந்துபடுவாள் எனக் கருதிக் கொலை குறித்தனர் என்றாள் என்க. |
|