9. ஊர்சூழ் வரி




50
கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன்
புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ
மன்பதை பழிதூற்ற மன்னவன் றவறிழைப்ப
உண்பதோர் வினைகாணா இதுவென வுரையாரோ


47
உரை
50

       கண்பொழி புனல் சோரும் கடுவினை உடையேன் முன் - கண்கள் பொழிகின்ற நீர் சோராநிற்கும் திவினையுடை யேன் கண் முன்னரேயே, புண்பொழி குருதியிராய்ப் பொடி யாடிக் கிடப்பதோ - நீவிர் புண்ணினின்றும் ஒழுகுகின்ற செந் நீரை உடையீராய்ப் புழுதி படிந்து கிடத்தல் தகுவதொன்றோ, மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப உண்பதோர் வினைகாண் ஆ இது வென உரையாரோ - மக்கள் பலரும் தன் பழியினைக் கூறித் தூற்றும் வண்ணம் பாண்டியன் தவற்றினைச் செய்ய இது நிகழ்ந்தது நீ நுகர்வதோர் தீவினையின் பயன்காண் என ஒருவரும் கூறாரோ ;

       குருதியிர் - முன்னிலையில் உயர்வுப்பன்மை, தவறிழைப்ப என் பதற்கு முன்னுரைத்தாங் குரைக்க. உண்பதோர் வினை என்பதற்கு உயிரினை உண்பதோர் வினை எனலும் அமையும்.

       மேற்கூறிய மூன்றும் முதுபாலை ; என்னை? 1"நனிமிகு சுரத் திடைக் கணவனை யிழந்து, தனிமகள் புலம்பிய முதுபாலையும்" என் பதனான் என்க. .

1 தொல். புறத்திணை. 24.