|
55 |
சான்றோரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல்
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் |
|
சான்றோரும்
உண்டுகொல் சான்றோரும் உண்டு கொல் - இக் கூடல் நகரிடத்துப் பெரியோரும் உளரோ,
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் -
பிறர் ஈன்று போகட்ட குழவியைத் தாங்கி வளர்க்கின்ற பெரியோரும் உளரோ ;
பிறர் ஈன்று போகட்ட குழவியைத் தம்
குழவிபோற் பேணி வளர்க்குஞ் சான்றோரென்க. |
|