9. ஊர்சூழ் வரி


தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்


57
உரை
59

       தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டு கொல் தெய்வமும் உண்டு கொல் - என் கணவனைக் கூரிய வாளால் வெட்டியதனால் கோல் கோடிய பாண்டியன் கூடல் நகரிடத்துத் தெய்வமும் உளதோ ;

       தப்புதல் - வெட்டுதல் ; 1"வாளிற் றப்பிய வண்ணமும்" என்றார் பிறரும், கற்புடை மகளிரும் சான்றோரும் தெய்வமும் உண்டாயின் இக் கொடுஞ்செயல் நிகழாது ; இது நிகழ்ந்தமையால் அவரும் அதுவும் இந் நகரிடத்து இல்லை என்றாள் என்க.

1 மணி. பதிகம். 76.