9. ஊர்சூழ் வரி

60





65
என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள
நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்
கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற
அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்

தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப்
பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்
எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான


60
உரை
67

       என்று இவை சொல்லி அழுவாள் கணவன்றன் பொன் துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள - என்று இவற் றைச் சொல்லி அழுகின்றவள் தன் கொழுநனுடைய திருத் தங் கிய மார்பினைத் தன் மார்போடு பொருந்தும் வண்ணம் தழுவிக் கொண்டாளாக, நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம் கன்றி யது என்று அவள் கண்ணீர் கையால் மாற்ற - உயிர் பெற் றெழுந்து நின்ற கோவலன் கண்ணகியை நோக்கி நினது நிறை மதிபோலும் ஒள்ளிய முகம் கன்றியதே என்று வாயாற் கூறி அவள் கண்ணீரைத் தன் கையால் துடைக்க, அழுது ஏங்கி நிலத் தின் வீழ்ந்து ஆயிழையாள் தன் கணவன் தொழுதகைய திருந்து அடியைத் துணைவளைக் கையாற் பற்ற - கண்ணகி புலம்பி ஏக்கமுற்று நிலத்தின்கண் விழுந்து தன் காதலனுடைய தொழத் தக்க திருந்திய அடிகளைத் தனது வளையணிந்த இரு கைகளாலும் பூண்டுகொண்டாளாக, பழுது ஒழிந்து எழுந்திருந் தான் பல்லமரர் குழாத்து உளான் எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்கவெனப் போனான் - இவ் வுடலைவிட்டு நீங்கித் துறக் கம் புக எழுந்தவன் எழுதிய அழகிய மலர்போலும் மை பூசிய கண்களையுடையாய் நீ இங்கிருக்கவெனச் சொல்லிப் பல தேவர் கூட்டத்துள்ளானாய் வானுலகு புக்கான் ;
       என்றிவை சொல்லி என்றது, "என்னுறுதுயர்" முதல், "தெய்வமு முண்டுகொல்" வரை கூறியன. அழுவாள், வினைப்பெயர் எழுந்து நின்றான் என மாறுக. நின்றான், பெயர். மாற்றல் - துடைத்தல். பழுது - உடல் ; 1"திருந்திய நின்மகன் தீது நீங்கினான்" என்ற விடத் துப் பழுதென்னும் சொல்லின் மறுபெயராகிய தீது என்னும் சொல் உடல் என்னும் பொருட்டாதல் காண்க. இனி, முன்னரே பழுதொழிந் திருந்தான் பல்லமரர் குழாத்துள்ளவன், தழீஇக் கொள்ள, எழுந்து நின்றான் மாற்ற, பின் வளைக்கையாற் பற்ற, உண்கண் இருந்தைக்க வெனப் போனான் எனக் கூட்டலும் அமையும். இருந்தைக்க - இருக்க ; வினைத்திரிசொல்.

1 சீவக. 327.