9. ஊர்சூழ் வரி


10
மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே
காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று


9
உரை
10

       மாதர்த் தகைய மடவார் கண் முன்னரே - தம் கணவர் காதலிக்குந் தகுதயினையுடைய மகளிர் கண் முன்னரேயே, காதற் கணவனைக் காண்பனே ஈது ஒன்று - அன்பு நிறைந்த என் கணவனை உயிருடையவனாகக் காண்பேன் அங்ஙனங் காணும் இஃதோர் புதுமையன்றோ ;

       மாதர் - காதல். தகை - ஈண்டுக் கற்பு. கணவனைக் காண் பேன் என்றது கணவனைப் பண்டுபோல உயிருடையவனாக் காண் பேன் என்றவாறு.