என்றாள்
எழுந்தாள் - என்றிங்ஙனங் கூறியவள் ஆண் டுப்போதற்கு எழுந்தாள், இடர் உற்ற தீக்
கனா நின்றாள் நினைந் தாள் நெடுங்கயற்கண் நீர் சோர - எழுந்தவள் தன்னூரிற் கண்ட
துன்ப மிக்க தீய கனாவினை நீண்ட கயல்போலும் கண் களினின்றும் நீரொழுக நின்று எண்ணினாள்,
நின்றாள் நினைந் தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் சென்றாள் அரசன் செழுங் கோயில்
வாயின்முன் - அங்ஙனம் நின்று நினைந்தவள் நெறி யறிதற்பொருட்டுத் தன் கண்ணீரைத்
துடைத்துப் பாண்டிய மன்னனது வளம் மிக்க கோயிலின் வாயிலிடத்தை அடைந்தாள் ;
தீக்கனாவென்றது முன்னர்த் தான்
கண்டு தேவந்தியிடம், 1"கடுக்குமென்
நெஞ்சம்" என்பது முதலாகச் சொல்லியவதனை என்க. என்றாள் - எழுவாய் ; சென்றாள்
- பயனிலை.
இது மயங்கிசைக் கொச்சகக்
கலிப்பா.
9. ஊர்சூழ் வரி முற்றிற்று.
|