மூலம்
9. ஊர்சூழ் வரி
காதற் கணவனைக் கண்டா லவன்வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று
11
உரை
12
காதற் கணவனைக் கண்டால் அவன் வாயின் தீது அறு நல்லுரை கேட்பனே ஈது ஒன்று - அங்ஙனம் என் கணவனைப் பண்டு போலக் காண்பேனாயின் அவன் வாயினாற் கூறும் குற்ற மற்ற இனிய மொழியைக் கேட்பேன் இஃதோர் சூளாகும் ;