9. ஊர்சூழ் வரி

தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்
நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று


13
உரை
14

       தீது அறு நல்லுரை கேளாது ஒழிவேனேல் - அங்ஙனம் அவன் கூறும் நல்லுரையைக் கேளாதொழிவேனாயின், நோதக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று - இவள் நமக்கு வருந் தத் தக்கன செய்தாளென்று என்னை இகழுக இது நுங்கட்கோர் வாய்ப்பிடம் ;

       நோதக்க செய்தது, 1 "நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்" என்று இகழ்ந்து கூறியது. எள்ளல் என்றது இவள் கள்வன் மனைவியே என்று இகழுமின் என்றவாறு. எள்ளல் - அல்லீற்று வியங்கோள் ; 2"மக்கட்பதடி எனல்" என்பதுபோல.

1 சிலப், 16 : 4. 2 குறள். 166