|
15 |
நோதக்க செய்தாளென்
றெள்ளல் இதுவொன்றென்று
அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி
மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக்
களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல் |
|
என்று
அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு ஏங்கி மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி
- என்று கூறி வருத்தமுற்றுப் பொறாது அழுகின்றாளை வளமிக்க மதுரை நகரத்தார் யாவரும் கண்டு
ஏக்கமுற்றுக் கலங்கி, களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல்
வளைந்தது இது என் கொல் - நீக்க வொண்ணாத துன்பத்தினை இக்
காரிகைக்குச் செய்து எஞ்ஞான்றும் கோடாத
செங்கோல் கோடிற்று இது யாது காரணத்தால் நிகழ்ந்ததோ ;
அயல் நாடு போந்து தீதிலாக் கணவனை
இழந்து தனித் துயருழத் தல் பற்றி மதுரையாரெல்லாரும் மயங்கினார் என்க, 1"அல்லற்
பட் டாற்றா தழுதகண் ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை" என்னும் குறளின் கருத்து
ஈண்டு அறிதற் குரியது. 2 "கணவனை இழந்தோர்க்குக்
காட்டுவதில்" ஆகலான், களையாத் துன்பம் என்றார
|
1
குறள், 555. 2 சிலப். 20: 81.
|
|