9. ஊர்சூழ் வரி


20
மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல


19
உரை
20

       மன்னவர் மன்னன் மதிக்குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என் கொல் - அரசர்க் கரசனும் திங்களை ஒத்த குடையினையும் வாளினையும் உடைய வேந்தனும் ஆகிய பாண்டியனது அரசியல் அழிவுற்றது இது யாது காரணத்தானிகழ்ந்ததோ :

       குடையையும் வாளையுமுடைய வேந்தன் என்க. குடையும் வாளுங் கூறவே அளியுந் தெறலும் பெறப்பட்டன. கொற்றம் - அரசியல்.