9. ஊர்சூழ் வரி


மண்குளிரச் செய்யு மறவேல் நெடுந்தகை
தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல்


21
உரை
22

       மண் குளிரச் செய்யும் மற வேல் நெடுந்தகை தண் குடை வெம்மை விளைத்தது இது 'என்கொல் - நிலவுலகினைக் குளிரச் செய்யும் மறம் பொருந்திய வேலையுடைய சிறந்த தகுதி யை யுடையானது தண் குடை வெம்மையை உண்டாக்கிற்று. இது யாது காரணத்தானிகழ்ந்ததோ ;

       மண்குளிரச் செய்தலாவது மன்பதை துன்புறாமற் காத்தல். மண் குளிரச் செய்யும் தண்குடை யென்க. 1"மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள், விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற், கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடி கயத் தடமுங் காவும், தண்குளிர் கொள்ளு மேனுந் தான்மிக வெதும்பு மன்றே" என்னுஞ் செய்யுள் ஈண்டு ஒத்து நோக்கற் குரியது.

1 சூளா. மந்திரசாலை, 26.