9. ஊர்சூழ் வரி


செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல


23
உரை
24

       செம்பொற் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம் பொருட் டால் வம்பப் பெருந்தெய்வம் வந்தது இது என் கொல் - செம் பொன்னாலாகிய ஓர் சிலம்பினைத் தனது கையின்கண் ஏந்தி நம்மைக் கெடுத்தற்பொருட்டுப் புதிய பெரிய தெய்வம் வந்துற்றது இதனால் மேல் விளைவது யாதோ ;

       நம்பொருட்டு - நம்மை நன்னெறிப்படுத்தும் பொருட்டு எனலு மாம். பெருந்தெய்வம் என்றது, முன்னர், 1"கற்புக் கடம் பூண்ட இத்தெய்வ மல்லது, பொற்புடைத் தெய்வம் யாம்கண் டில மால்" எனக் கூறினமையானென்க.

1 சிலப் 15: 143-4.