|
25
|
ஐயரி யுண்கண் அழுதேங்கி
யாற்றுவாள்
தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல் |
|
ஐ
அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் தெய்வ முற்றாள் போலுந் தகையள் இதுவென் கொல்
- புலம்பி ஏக் குற்று அரற்றுவாளாய அழகிய அரி பரந்தமை பூசிய கணணினை யுடையாள் தெய்வத்
தன்மையுற்றாள் போலுந் தகுதியை யுடையளாயினாள் இதனால் மேல் விளைவது யாதோ ;
ஐ - வியப்புமாம். உண்கண் - மை பூசிய
கண். அரற்றுவாள் உண்கண் என மாறுக. தெய்வமுற்றாள் - தெய்வமேறினாள் எனலு மாம்.
|
|