|
|
குடையொடு கோல்வீழ
நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா |
|
குடையொடு
கோல் வீழ நின்று நடுங்கும் கடைமணியின் குரல் காண்பென் காண் எல்லா - தோழீ நம்
மன்னனது வெண் கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழ வாயிலிடத்து நிலைபெற்று அசையும்
மணியின் ஓசையை யான் கனவிலே காண்பேன் ;
ஒடு : எண்ணொடு. வீழ என்னுமெச்சம்
இது நிகழாநிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருட்டு. கடை - வாயிற்கடை. காண் - அசை.
பின்வருவனவும் இன்ன.
|
|