|
65
|
வெள்வேற் கொற்றங்
காண்என ஒள்ளிழை
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத் |
|
ஒள்ளிழை
- ஒள்ளிய இழையினையுடையாளாகிய கண்ணகி அவனை நோக்கி, நல் திறம் படராக் கொற்கை
வேந்தே - அறநெறியிற் செல்லாத கொற்கை நகரத்து அரசனே, என் காற் பொற் சிலம்பு
மணியுடை அரியே என - என் காற்கு அணியாம் பொன்னாலாய சிலம்பினுடைய பரல் மாணிக்கமே
என்று கூற ;
|
நற்றிறம்
- அறத்தின் கூறுபாடு. சிலம்புடை அரி மணியே என மாறுக.
|
|