|
|
காவி யுகுநீருங் கையில்
தனிச்சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவம்--பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
கூடலான கூடாயி னான். |
|
காவி
உகு நீரும் - கண்ணகியின் நீல மலர் போன்ற விழி பொழியும் நீரையும், கையில் தனிச்
சிலம்பும் - அவள் கையில் உள்ள ஒற்றைச் சிலம்பினையும், ஆவி குடிபோன அவ் வடிவும் -
உயிர் நீங்கினால் ஒத்த அவள் வடிவினையும், காடு எல்லாம் சூழ்ந்த கருங்குழலும் - காடுபோல்
விரிந்து உடல் முழுதுஞ் சூழ்ந்த கரிய கூந்தலையும், கூடலான் கண்டு அஞ்சிக் கூடு ஆயினான்
- கூடற்பதிக்கரசனாகிய பாண்டியன் கண்டு அஞ்சி வெற்றுடம்பாயினான், பாவியேன் - பாவியாகிய
யான் இதனைக் காண்பேனாயினேன்.
|
கூடாயினான்
- உயிர்நீத்தான் என்றபடி, பாவியேன் என்ப தன் பின் ஒரு சொல் வருவித்து முடிக்க. இதுவும்
வருஞ் செய்யுளும் கண்டாரொருவர் கூற்றாக அமைந்துள்ளன.
|
|