|
|
மெய்யிற் பொடியும்
விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன்
கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர். |
|
மெய்யிற்
பொடியும் - கண்ணகியின் உடம்பிற் படிந்த புழுதியையும், விரித்த கருங்குழலும் - விரிக்கப்பட்ட
கரிய கூந்தலையும், கையில் தனிச்சிலம்பும் - கையிலுள்ள ஒற்றைச் சிலம்பினையும், கண்ணீரும்
- கண்ணீரையும், வையைக்கோன் - வையைக்கிறைவனாகிய பாண்டியன், கண்டவளே தோற்றான்
- பார்த்த வளவிலே வழக்கிலே தோல்வியுற்றான், அக் காரிகை தன் சொல் செவியில்
உண்டளவே - அந் நங்கையின் சொல்லினைச் செவியில் உட்கொண்டவளவிலே, தோற்றான்
உயிர் - உயிரை இழந்தான்.
|
கண்ட,
உண்ட என்னும் பெயரெச்சத் தகரங்கள் விகாரத்தாற் றொக்கன.
வழக்குரை காதை முற்றிற்று. |
|