10. வழக்குரை காதை

  விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா

6
உரை
7

       விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும் கடுங்கதிர் மீன் இவை காண்பென் காண் எல்லா - இரா ஒழுங்குபட்ட வான வில்லினைத் தோற்றுவிக்கும் ; காயும் பகற்பொழுதில் மிக்க ஒளியினையுடைய மீன்கள் எரிந்து கீழே விழும் ; தோழீ யான் இவற்றைக் காண்பேன் ;
       இடும் எனப் பிரித்தலுமாம். கொடி - ஒழுங்கு. இர - இரா ; 1குறியதன் இறுதிச் சினை கெட்டது. இர வில் விடும், பகல் மீன் விழும் என்க.

1 தொல். எழுத்து. 234.