10. வழக்குரை காதை



10










15
செங்கோலும் வெண்குடையும்
    செறிநிலத்து மறிந்துவீழ்தரும்
நங்கோன்றன் கொற்றவாயில்
    மணிநடுங்க நடுங்குமுள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
    இருநான்கு திசையும்அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு
    மன்னவற்கியாம் உரைத்துமென
ஆடியேந்தினர் கலனேந்தினர்
    அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
    கொழுந்திரையலின் செப்பேந்தினர்
வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
    மான்மதத்தின் சாந்தேந்தினர

9
உரை
15

      செங்கோலும் வெண் குடையும் செறி நிலத்து மறிந்து வீழ்தரும் - அரசனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் அணுச் செறிந்த நிலத்தின்கண் மடங்கி வீழும், நங்கோன் தன் கொற்ற வாயில் மணி நடுங்க நடுங்கும் உள்ளம் - நம் மன்னனது வெற்றி தரும் வாயிலின்கண் கட்டிய மணி என்னுள்ளம் நடுக்குறும் வண்ணம் அசையும், இரவு வில்லிடும் - இராக்கால
      மானது வான வில்லைத் தோற்றுவிக்கும், பகல் மீன் விழும் - பகற் காலத்து விண்மீன்கள் எரிந்து கீழே விழும், இரு நான்கு திசையும் அதிர்ந்திடும் - எட்டுத் திக்கும் அதிரும், வருவது ஓர் துன்பம் உண்டு - ஆகலான் வரக்கடவதாகிய துன்பம் ஒன்றுளது, மன்னவற்கு யாம் உரைத்தும் என - யாம் அரசனுக்கு இச் செய்தியைக் கூறுதும் என்று கூற ;
      செறிநிலம் - அணுச் செறிந்த நிலம். உள்ளம் நடுங்க மணி நடுங்கும் என்க. நடுங்கல் - அசைதல், ஒலித்தல். தான் பெருந்தேவி யாகலான், அப் பெருமிதந் தோன்ற, யாம் உரைத்தும் என்றாள். பெருந்தேவியைத் தம் பிராட்டி எனவும் வழங்குவர். முன்னர்க் கூறியவற்றையே மீட்டுங் கூறினாள், அவற்றாற் றுன்பம் வருமென்பதனை உணர்த்துதற் பொருட்டு ; என்னை ? "கூறியது கூறினுங் குற்ற மில்லை, வேறொரு பொருளை விளக்கு மாயின்" என்பவாகலான்.