|
20
|
நரைவிரைஇய நறுங்கூந்தலர்
உரைவிரைஇய பலர்வாழ்த்திட
ஈண்டுநீர் வையங்காக்கும்
பாண்டியன்பெருந் தேவிவாழ்கென
ஆயமுங் காவலுஞ்சென்
றடியீடு பரசியேத்தக்
கோப்பெருந் தேவிசென்றுதன்
தீக்கனாத் திறமுரைப்ப |
|
நரை
விரைஇய நறுங் கூந்தலர் உரை விரைஇய பலர் வாழ்த்திட ஈண்டு நீர் வையங் காக்கும் பாண்டியன்
பெருந்தேவி வாழ்கென - நரை கலந்த நல்ல கூந்தலையுடைய முதுமகளிர
|
பலர்
கடல் சூழ்ந்த இவ் வுலகத்தினைப் புரக்கும் பாண்டிய னுடைய பெருந்தேவி நீடு வாழ்கவெனச்
சொல்லிப் புகழ் கலந்த மொழிகளான் வாழ்த்தவும், ஆயமும் காவலும் சென்று அடியீடு பரசி
ஏத்த - சேவிக்குந் தோழியரும் காவல் மகளிரும் பின் சென்று அடியிடுந்தோறும் புகழ்ந்து
போற்றவும், கோப்பெருந்தேவி சென்று தன் தீக்கனாத் திறம் உரைப்ப - பாண்டியன் பெருந்தேவி
அரசனிடத்துச் சென்று தான் கண்ட தீய கனாவின் தன்மையை எடுத்துச் சொல்ல ;
பின்னர்க் கூறிய விரைஇய, பலவின்பாற் பெயர்
; மூன்றனுருபு விரிக்க. ஈண்டு நீர் - கடல். கோப்பெருந்தேவி - பெயர். திறம் - வகையுமாம்.
நறுங்கூந்தலர் பலர் தேவி வாழ்கென வாழ்த்திட ஆயமுங் காவலும் ஏத்தச் சென்று உரைப்ப
என மாறியுரைக்க.
|
|