10. வழக்குரை காதை


அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே ; இப்பால்

22
உரை
23

      அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன் திரு வீழ் மார்பின் தென்னர் கோவே - திருமகள் விரும்பும் மார்பினை யுடைய பாண்டியர் தலைவனான நெடுஞ்செழியன் சிங்கஞ் சுமந்த தவிசின்மீது அமர்ந்திருந்தான் ;
      "திருவீழ் மார்பிற் றென்னவன்" என்றார் பிறரும் ; திருவீழ் மார்பு என்பதற்கு ஈண்டுத் திருமகள் கழியும் மார்பு எனக் கோடலும் அமையும்.