10. வழக்குரை காதை



25

திருவீழ் மார்பின் தென்னவர் கோவே ; இப்பால்
வாயி லோயே வாயி லோயே
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று
அறிவிப் பாயே அறிவிப் பாயே, என

23
உரை
29

      இப் பால் - இங்ஙனமுரைத்து நின்றதற் பின்னர் ; வாயிலோயே வாயிலோயே அறிவு அறைபோகிய பொறி யறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே - அறிவு கீழற்றுப் போகிய அற நினைவு அற்ற உள்ளத்தினையுடைய அரச நீதியற்ற வறியோனது கோயில் வாயில் காப்போய், இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள்-தன் கணவனை இழந்தாளொருத்தி பரலினையுடைய இரண்டு சிலம்பினுள் ஒன்றனை ஏந்திய கையினையுடையளாய், கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே என - நம் கோயில் வாயி லிடத்தாள் என்று அவ்வரசற்கு அறிவிப்பாய் என்று கண்ணகி கூற ;
      அறைபோதல் - கீழறுத்தல். பொறி - அறம். பிழைத்தோன் : வினைப்பெயர். இணையரிச்சிலம்பு என்பது நீ கோவலனிடைக் கொண்ட சிலம்பினை ஒத்த சிலம்பு எனவும் பொருள் கொள்ள அமைந்துளது. வாயிலோயே வாயிலோயே எனவும் அறிவிப்பாயே அறிவிப்பாயே எனவும் வந்த அடுக்குகள் விரைவும் வெகுளியும் பற்றியன.