11. வஞ்சினமாலை






50
விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்றோன்றி

மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்
பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்


46
உரை
52

வட்டித்த நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடை - அங்ஙனம் அவள் எறிந்த அளவிலே எழுதினாலொத்த நீல நிறத்தினையும் புரிந்த செந்நிறமுடைய நீண்ட சடையினையும், பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து - பாலை ஒத்த வெள்ளிய எயிற்றினையும் உடைய பார்ப்பன வடிவத்தோடு, மாலை எரி அங்கி வானவன் தான் தோன்றி - ஒழுங்குபட்ட யாவற்றையும் எரித்தலையுடைய தீக்கடவுள் வெளிப்பட்டு, மா பத்தினி நின்னை மாணப் பிழைத்த நாள் - சிறந்த கற்புடையாய் இந் நகர் நினக்கு மிகவும் தவறிழைத்த அந் நாளே, பாய் எரி இந்தப் பதியூட்டப் பண்டே ஓர் ஏவல் உடையேனால் - இந் நகரினைப் பரந்த எரிக்கு ஊட்டுவதற்கு முன்னரே யான் ஓர் ஏவல் பெற்றுளேன், யார் பிழைப்பார் ஈங்கு என்ன - இவ்விடத்துப் பிழைத்தற்குரியோர் யாரென்று கண்ணகியைக் கேட்க ; வட்டித்த - சூளுற்றதனால் வந்த என வுரைத்தலுமாம். மாண - மிக; 1"ஞாலத்தின் மாணப் பெரிது" என்புழி மாணவென்பது அப் பொருட்டாதல் காண்க. மாண - திண்ணிதாக என்பர் அரும்பத வுரையாசிரியர். நிறத்தினையும் சடையினையும் எயிற்றினையும் கோலத்தினையும் உடைய வானவன் என்க. பாய் எரி - பரந்த எரி. ஆல்: அசை. வானவன் தோன்றி என்ன என்க.

1 குறள். 102.