|
55 |
பார்ப்பா ரறவோர்
பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர் |
|
பார்ப்பார்
அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு - அந்தணரும்
அறவோரும் ஆவும் கற்புடை மகளிரும் முதியோரும் குழந்தைகளும் எனப்படும் இவர்களை ஒழித்து,
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று - தீய தன்மையுடையாரிடத்தே சென்று அழிப்பா யாகவென்று,
காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நல் தேரான் கூடல் நகர் - கண்ணகி
ஏவலான் அத் தீயோரைச் சுடுதற் பொருட்டு நல்ல தேரினையுடைய பாண்டியன் கூடல் நகரிடத்துப்
புகையொடு கூடிய தீ முடுகிற்று என்க.
சேர்கென்று பொற்றொடி ஏவ எனவும்,
காய்த்திய புகைய ழல்மண்டிற்று எனவும் கூட்டுக ; காய்த்திய, செய்யிய வென்னும் வினையெச்சம்.
"பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப் பெண்டிர், மூத்தோர் குழவி எனுமிவரை" என்பது
திணை விராய் உயர்திணை முடிபு பெற்றது.
இறுதி வெண்பா, இளம்புலவர் யாராலோ
எழுதிச் சேர்க்கப்பட்டது ; பொருட் சிறப்பில்லாதது.
கோவேந்தன் றேவி இயல்பினேனாயினும்
பெற்றிய காண் ; மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் ; ஆமாகில் ஒட்டேன் ;
ஒழிப்பேன் ; காண்குறுவாய் என்னா அகலாத் திருகி எறிந்தாள் ; வானவன் தோன்றி யார்
பிழைப்பார் ஈங்கென்ன, கைவிட்டுச் சேர்கென்று பொற்றொடி ஏவ. நகர் அழல் மண்டிற்று
என வினை முடிக்க.
வஞ்சின
மாலை முற்றிற்று. |
|