|
10
|
முன்னிறுத்திக் காட்டிய
மொய்குழலாள் பொன்னிக்
கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று
உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து
அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற
வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற |
|
பொன்னிக்
கரையின் மணற்பாவை நின் கணவன் ஆமென்று உரைசெய்த மாதரொடும் போகாள் - கரையினையுடைய
காவிரிக்கண் ஒருத்தி தான் விளையாடற்கமைத்த மணற்பாவையினை, இப் பாவை நினக்குக்
கணவனாகும் என்று கூறிய அவளோடும் ஆடப் போந்த ஏனை மகளிரோடும் வீடு செல்லாளாய்,திரை
வந்து அழியாது சூழ் போக ஆங்கு உந்தி நின்ற வரியார் அகல் அல்குல் மாதர் - அலைகள்
நெருங்கி அப் பாவையினை அழியாதே சுற்றிப் போதலான் ஆற்றிடைக்குறையாகிய விடத்தில்
நின்ற வரி பொருந்திய அகன்ற அல்குலையுடைய ஓர் நங்கையும் ;
கரையின் பொன்னி என மாறுக. மேல்,
திரை அழியாது சூழ் போக அம் மாதர் உந்தி நின்றமைபெறப்படலான் மணற்பாவை வைத்தாடிய
இடம் பொன்னிக்கரை அன்று என்க. சூழ்போக என்பதற்குச் சுற்றிப் போகும் வண்ணம் எனவும்,
ஆங்குந்தி நின்ற என்பதற்கு ஆற்றின் நடுவு குறையாம்படி நின்ற எனவும் உரைத்தலுமாம். உந்தி
- ஆற்றிடைக்குறை. போகாள் நின்ற என்க. |
|