11. வஞ்சினமாலை

10





15
வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு

பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி


10
உரை
15

உரை சான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் - புகழ் மிக்க அரசனாகிய கரிகால் வளவனுடைய மகளாகிய ஆதிமந்தி, வஞ்சிக்கோன் தன்னைப் புனல் கொள்ள - தான் காதலித்த வஞ்சி நகரத் தலைவனாய ஆட்டனத்தி யென்பவனைக் காவிரி நீர் அடித்துச் செல்லலான், தான் புனலின் பின் சென்று கல் நவில் தோளாயோ என்ன - அவ் ஆதிமந்தி தான் காவிரி நீர் செல்லும் வழியே சென்று கடற் கரையில் நின்று கல்லினையொத்த தோள்களை யுடையாய் நீ யாண்டுள்ளாய் என்று அரற்ற, கடல் வந்து முன்னிறுத்திக் காட்ட - கடல் அவனைக் கொடுவந்து அவள் முன்னிலைப்படுத்திக் காட்டலான், அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் - அக் காதலனைத் தழுவிக்கொண்டு பொற்கொடி போல வந்தாளும் ;

சோழ அரசருட் சிறந்தோனாகாலன் உரை சான்ற மன்னன் என்றாள். வளவன் மகள் - ஆதிமந்தியார் ; புலமை வாய்ந்தோர். வஞ்சிக்கோன் - சேர மன்னனாகிய ஆட்டன் அத்தியென்போன் ; ஆடுதல் வன்மையால் ஆட்டன் என்பது பெயராயிற்றுப் போலும்.


ஆதிமந்தியார் கழார் என்னும் பதியைச் சார்ந்த காவிரித்துறையில் காதலனாகிய ஆட்டனத்தியுடன் நீர் விழாக் கொண்டாடிய பொழுது, அவனைக் காவிரி வெள்ளம் கவர்ந்துகொள்ள, இவர் அவனைக் காணாது நீரின் பின்னே சென்று கடற்கரையில் கூவி அரற்றினாராக, இவரது கற்பின் மாண்பினால் கடல் அவனைக் கரைக்கு அணிமையிற் கொணர்ந்து நிறுத்திக் காட்ட, இவர் அவனைத் தழுவிக் கொண்டு மீண்டார் என்பது வரலாறு ; கடல் கொணர்ந்து நிறுத்திய காதலனை அங்கே நீராடிய மருதி யென்பவள் இவர்பாற் சேர்த்துப் புகழ்பெற்றன ளென்பதோர் செய்தியும் அறியப்படுகின்றது.

இவற்றை, 1" ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக் கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத், தண்பதங் கொண்டு தவிர்ந்த வின்னிசை, ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரளக், கருங்கச்சி யாத்த காண்பினவ்வயிற், றரும்பொலம் பாண்டியன் மணியொடு தெளிர்ப்பப், புனையந் தாடும் அத்தியணி நயந்து, காவிரி கொண்டொளித் தாங்கு" 2"மந்தி, பனிவார் கண்ணள் பலபுலந் துறையக், கடுந்திற லத்தி யாடணி நசைஇ, நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்கு" 3"கழாஅர்ப் பெருந்துறை விழவி னாடும், ஈட்டெழிற் பொலிந்த வேந்துகுவவு மொய்ம்பின், ஆட்ட னத்தி நலனயந் துரைஇத், தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின், மாதிரந் துழைஇ மதிமருண் டிடருழந்த, ஆதி மந்தி காதலற் காட்டிப், படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின், மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்" என்பன முதலிய வற்றானறிக.

1 அகம், 376. 2 அகம், 396. 3 அகம், 222.