|
15
|
பொன்னங் கொடிபோலப்
போதந்தாள் மன்னி
மணல்மலிபூங் கானல் வருகலன்கள் நோக்கிக்
கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய |
|
மன்னி
மணல் மலி பூங் கானல் வரு கலன்கள் நோக்கி - மணல் நிறைந்த பொலிவு பெற்ற கடற்கரைச்
சோலையிடத்தே தங்கிக் கடலினின்றும் கரைக்கு வரும் மரக்கலங்களை நோக்கி இருந்து,
கணவன் வரக் கல்லுருவம் நீத்தாள் - தன் கணவன
கலத்தினின்றும் வந்த அளவில் தன்
கல் வடிவத்தினை ஒழித்தாளும் ;
பூங்கானல் மன்னி என்க. கானல் - கடற்கரைச்
சாலை. கடல் கடந்து பொருளீட்டற் பொருட்டுப் போயின தன் கணவன் வரும் வரை ஒருத்தி
கல்வடிவா யிருந்தனள் என்க.
|
|